LYRIC

  • Tamil Version
  • English Version
  • Musical Chords

Ithuvarai Nadaththi IN TAMIL VERSION

கலங்கின நேரங்களில் கை தூக்கி எடுப்பவரே
கண்ணீரின் பள்ளத்தாக்கில்
என்னோடு இருப்பவரே — 2
உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
காலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை — 2

நீங்க தான்பா எங்க நம்பிக்கை
உம்மை அன்றி வேறு துணை இல்லை — 2

தேவைகள் ஆயிரம் என்னுள் இருப்பினும்
சோர்ந்து போவதில்லை என்னோடு நீர் இருக்க — 2
தேவையைக் காட்டிலும் பெரியவர் நீரல்லோ
நினைப்பதை பார்க்கிலும் செய்பவர் நீரல்லோ — 2
— நீங்க

மனிதனின் தூஷணையில் மனமடிவடைவதில்லை
நீர் எந்தன் பக்கம் உண்டு
தோல்விகள் எனக்கு இல்லை — 2
நாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும்
வாதாட நீர் உண்டு ஒரு போதும் கலக்கம் இல்லை — 2
நீங்க தான்பா என் நம்பிக்கை
உம்மை அன்றி வேறு துணை இல்லை — 2

கலங்கின நேரங்களில் கை தூக்கி எடுப்பவரே
கண்ணீரின் பள்ளத்தாக்கில்
என்னோடு இருப்பவரே — 2
உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
காலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை
உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
காலங்கள் மாறினாலும் நீங்க மட்டும் மாறவில்லை
நீங்க தான்பா என் நம்பிக்கை
உம்மை அன்றி வேறு துணை இல்லை — 2
நீங்க தான்பா எங்க நம்பிக்கை
உம்மை அன்றி வேறு துணை இல்லை — 2

Ithuvarai Nadaththi IN ENGLISH VERSION

Ithuvarai Nadaththi MUSIC CHORDS

Added by

admin

SHARE

About Song

Song Name :

Ithuvarai Nadaththi

Artist Name :

john jebaraj

Album Name :

Levi 1 Lyrics

Description :
Tags :

Comments are off this post

ADVERTISEMENT

Hosanna Lyrics Copyright © 2019.
Show
Hide